dharapuram

You are here: Home // Dharapuram, Health, Information, News // சத்துணவு திட்ட பணிகள்”ஆன்-லைனில்’ கண்காணிப்பு

சத்துணவு திட்ட பணிகள்”ஆன்-லைனில்’ கண்காணிப்பு

திருப்பூர்:சத்துணவு திட்ட பணிகளை, “ஆன்-லைனில்’ கண்காணிக்க வசதியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,300 சத்துணவு மையத்தின் செயல்பாடுகள், பொது விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன.திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம், உடுமலை நகராட்சி கள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் என மாவட்ட அளவில் 1,300 சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இத்திட்ட விவரங்களை நேரடியாக கண்காணிக்க வசதியாக, அனைத்து விவரங்களையும் “ஆன்-லைன்’ மூலமாக பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மையங்களுக்கும் “கோடு’ எண் வழங்கப்பட்டு, மாணவ, மாணவியர், உணவு தயாரிப்பு, முட்டை கொள்முதல் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர் கூறுகையில்,”"உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், தினமும் விவரங்களை பெற்று ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். “ஆன்-லைனில்’ கண்காணிக்க வசதிக்காக, சத்துணவு அமைப் பாளர்களின் பதிவேடு விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்றார்

Leave a Reply

Copyright © 2010 - 2011 Dharapuram Info. All rights reserved.
In collobration with Oddanchatram.in.