dharapuram

You are here: Home // agriculture, Dharapuram, Information // அமெரிக்காவில் கோடி கணக்கில் முதலீடு – தாராபுரம் கொப்பரை வியாபாரியிடம் விசாரணை

அமெரிக்காவில் கோடி கணக்கில் முதலீடு – தாராபுரம் கொப்பரை வியாபாரியிடம் விசாரணை

source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=35761


கோவை: சென்னையில் செயல்படும் தனியார் வங்கி மூலம் அமெரிக்காவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக தாராபுரத்தை சேர்ந்த கொப்பரை அதிபரிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.சென்னையில் உள்ள தனியார் வங்கி மூலம் சமீபத்தில் இந்திய பணம் அமெரிக்க டாலருக்கு மாற்றப்பட்டு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு தனி நபர் மட்டுமே செய்ததால் வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நிதித் துறை அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவுக்கும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீவிர விசாரணை நடந்தது. அமெரிக்காவுக்கு பணத்தை பரிமாற்றம் செய்த நபரின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு புலனாய்வு பிரிவு மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வருமானவரித் துறையி னர் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் மொத்தம் 27,500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒரு நபர் மட்டுமில்லாமல் பலருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கொப்பரை தேங்காய் வியாபாரி ராமலிங்கம் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி தாராபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில் அவரது அலுவலகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வங்கி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து கோவை வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தாராபுரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அமெரிக்காவில் முதலீடு செய்திருப்பது தொடர்பாக 5 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு ஆவணமும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் நடந்தது, முழு பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினர். அமெரிக்க சட்டத் திட்டங்கள்படி எந்த நாட்டை சேர்ந்தவரும் முதலீடு செய்ய முடியும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில், வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட் டுள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக அங்கு முதலீடு செய்வதற்கு பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய ரூபாய் மதிப்பின்படி நாடு முழு வதும் 27,500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்திருக்கலாம். தாராபுரத்தில் கொப்பரை வியாபாரி மட்டும் 2,500 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Copyright © 2010 - 2011 Dharapuram Info. All rights reserved.
In collobration with Oddanchatram.in.